English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Amos Chapters

1 தேகுவே ஊரைச் சார்ந்த இடையர்களுள் ஒருவரான ஆமோஸ் என்பவர், யூதாவின் அரசனாகிய ஓசியா காலத்திலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாசின் மகன் யெரோபோவாமின் காலத்திலும், நில நடுக்கம் உண்டாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் இஸ்ராயேலைக் குறித்துக் கண்ட காட்சியின் வார்த்தைகளாவன.
2 அவர் கூறினார்: "சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமிலிருந்து தம் குரலை எழுப்புகிறார்; இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் புலம்புகின்றன, கர்மேலின் கொடுமுடி உலர்கின்றது. "
3 ஆண்டவர் கூறுவது இதுவே: "தமஸ்கு நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் கலகாத்தை இருப்புருளையில் வைத்து ஆட்டினார்கள்.
4 ஆதலால் அசாயேல் வீட்டின் மேல் தீயனுப்புவோம், அது பெனாதாத்தின் அரண்மனைகளை அழித்து விடும்.
5 தமஸ்கின் தாழ்ப்பாளை முறித்திடுவோம்; பிக்காத்- ஆவேனில் அரியணை வீற்றிருப்பவனையும், பேத்தேதேனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்; சீரியா நாட்டினர் கீருக்கு நாடுகடத்தப் படுவர்" என்கிறார் ஆண்டவர்.
6 ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கூட்டிப் போனார்கள்.
7 ஆதலால் காசாவின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்;
8 ஆசோத்தில் வாழும் குடிமக்களையும், அஸ்கலோனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்; அக்காரோன் மீது நம் கரத்தைத் திருப்புவோம், பிலிஸ்தியருள் எஞ்சினோரும் அழிந்திடுவர்" என்கிறார் ஆண்டவர்.
9 ஆண்டவர் கூறுவது இதுவே: "தீர் நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்றமாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள், சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைக்கவே இல்லை.
10 ஆதலால் தீரின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம்; அது அதனுடைய அரண்மனைகளை அழித்துவிடும்."
11 ஆண்டவர் கூறுவது இதுவே: "ஏதோம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்றமாட்டோம்; இரக்கம் கொஞ்சமும் காட்டாமல் தன் சகோதரனையே வாளால் துன்புறுத்தினான்; தன் ஆத்திரத்தை அவன் அடக்கி வையாமல் என்றென்றும் தன் கோபத்தைக் காட்டி வந்தான்.
12 ஆதலால் தேமான் மேல் நாம் தீயனுப்புவோம், அது போஸ்ராவின் அரண்மனைகளை அழித்துவிடும்."
13 ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, கலகாத்தின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தனர்;
14 ஆதலால் ராபாவின் கோட்டை மதிலில் தீ மூட்டுவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்; போர் தொடுக்கும் நாளிலே பேரிரைச்சலும், சூறாவளி நாளிலே கடும்புயலும் இருக்கும்!
15 அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான், தலைவர்களும் அவனோடு கொண்டு போகப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
16 என் திரு மலையில், நீங்கள் என் தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும் குடிப்பார்கள். மேலும்குடிப்பார்ர்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்; குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.
17 ஆனால், தப்பிப் பிழைத்தோர் சீயோன் மலையில் இருப்பர்; சீயோன் மலையும் தூய்மையாய் இருக்கும்; யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர்.
18 யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்; யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர்; ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்; ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார்; ஆண்டவரே இதைக் கூறினார்.
19 நெகேபில் இருப்பவர்கள் ஏசாவின் மலையைத் தமதாக்கிக் கொள்வார்கள். செபேலாவைச் சார்ந்தவர்கள் பெலிஸ்தியர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எப்ராயிம், சமாரியா நாடுகளைத் தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்; பென்யமினோ கிலயாதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.
20 இஸ்ரயேலிலிருந்து நாடுகடத்தப்பட்ட வீரர்கள் திரும்பி வந்து பெனீசியாவிலிருந்து சாரிபாத்து வரை உள்ள நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; எருசலேமிலிருந்து செபராதுக்கு நாடுகடத்தப்பட்டோர் நெகேபின் நகர்களைச் சொந்தமாக்கிக் கொள்வர்.
21 விடுதலை பெற்றோர் ஏசாவின் மலையை ஆளுவதற்குச் சீயோன் மலைமேல் ஏறுவர்; அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும்.
×

Alert

×